ஆட்டுக்குடல் குழம்பு - South Recipes
ஆட்டுக்குடல் குழம்பு

ஆட்டுக்குடல் குழம்பு

Share This

தேவையான பொருட்கள்:
  • சுத்தம் செய்த குடல் - 1
  • இஞ்சி - சிறு துண்டு
  • பூண்டு- 4 பல்
  • சின்ன வெங்காயம் - 4
  • தேங்காய்துருவல் - 1/2 கப்
  • மிளகாய் தூள் - 3/4 தேக்கரண்டி
  • மல்லி தூள் - 1/2 தேக்கரண்டி
  • சோம்பு,சீரக தூள் - 1 தேக்கரண்டி
  • பட்டை - 2 துண்டு
  • லவங்கம் - 2
  • ஏலம் - 1
  • சோம்பு - சிறிதளவு
  • நல்லஎண்ணெய் - 50 மி .லி
  • புளி - ஒரு பெரிய எலுமிச்சை அளவு
  • உப்பு - தேவையான அளவு
  • பெரிய வெங்காயம்(அரிந்தது) - 1/2 கப்
  • தக்காளி(அரிந்தது) - 3
செய்முறை:
* முதலில் இஞ்சி,பூண்டு,சின்ன வெங்காயம்,தேங்காய் இவற்றை அரைத்து வைத்துக்கொள்ளவும்.
* பின்னர் அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை,சோம்பு,லவங்கம்,ஏலம் போட்டு தாளித்து அரிந்த பெரிய வெங்காயம்,தக்காளி,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
* தக்காளி நன்கு வதங்கியவுடன் அரைத்த இஞ்சி,பூண்டு விழுது ,மிளகாய், மல்லி, சோம்பு, சீரக பொடிகளை சேர்த்து வதக்கவும்.
* புளியை கெட்டியாக கரைத்து ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து சுத்தம் செய்த குடலையும் அதனுடன் சேர்க்கவும்.
* தண்ணீர் அதிகமாக சேர்க்க கூடாது,ஏனெனில் குடல் தண்ணீர் விட்டு வேகும்.
* குக்கரில் 11 விசில் அடித்தவுடன் இறக்கவும்.
வயிற்று புண் தீர்க்கும் குடல் குழம்பு ரெடி!

No comments:

Post a Comment

Pages