தேவையானவை:
- பழுத்த தக்காளி - 4 முதல் 5,
- புழுங்கல் அரிசி - ஒன்றரை கப்,
- இஞ்சி - 1 துண்டு,
- காய்ந்த மிளகாய் - மூன்று,
- மிளகு - 2 டேபிள்ஸ்பூன்,
- பூண்டு - 4 பல்,
- எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் வடித்து இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், மிளகு சேர்த்து அரைக்கவும். சிறிது அரைபட்டதும் தக்காளியை நறுக்கிப் போட்டு அரைக்கவும்.
இந்த மாவில் உப்பு சேர்த்து கலந்து, கல் காய்ந்ததும், அடைக்கு ஊற்றி இருபுறமும் எண்ணெய் விட்டு மிதமான தீயில் வேக விட்டு எடுக்கவும். தக்காளியின் புளிப்பும் லேசான இனிப்பும் இஞ்சி, பூண்டு, மிளகு வாசனையும் கலந்து கட்டி ருசிக்க வைக்கும். இதற்கு, தேங்காய் சட்னி ஏற்ற சைட் டிஷ்!
No comments:
Post a Comment