தேவையானவை:
- புழுங்கல் அரிசி - ஒரு கப்,
- பாசிப்பருப்பு, துவரம்பருப்பு - தலா அரை கப்,
- சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 1,
- ஆல்வள்ளிக் கிழங்கு - 1,
- பெரிய நெல்லிக்காய் - 3,
- நறுக்கிய முருங்கைக்கீரை - ஒரு கப்,
- காய்ந்த மிளகாய் - 4,
- இஞ்சி - சிறு துண்டு,
- பூண்டு - 4 பல்,
- எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
ஆல்வள்ளிக் கிழங்கையும் சர்க்கரைவள்ளிக் கிழங்கையும் வேக வைத்து தோல் உரித்துக் கொள்ளவும். பாசிப்பருப்பு, துவரம்பருப்பை ஊற வைக்கவும். நெல்லிக்காயை சீவி கொட்டையை நீக்கவும்.
அரிசியை ஊற வைத்து களைந்து தண்ணீரை வடித்து, ஊற வைத்த பருப்பு, நெல்லிக்காய், வேக வைத்த கிழங்கு, இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து கரகரப்பாக அடைமாவு பதத்தில் அரைத்துக் கொள்ளவும்.
முருங்கைக்கீரை, உப்பு சேர்த்து கலந்து, கல் காய்ந்ததும் அடை தட்டி எண்ணெய் விட்டு முறுகலாக வெந்ததும் எடுக்கவும். கீரை, கிழங்கு என மாறுபட்ட சுவையில் மணக்கும் இந்த அடை.
No comments:
Post a Comment