தேவையான பொருட்கள்:
- கல் நீக்கிய எள்(கருப்பு) - 50 கிராம்
- உளுத்தம்பருப்பு - 50 கிராம்
- கடலைப்பருப்பு - 50 கிராம்
- வேர்கடலை - 50 கிராம்
- மிளகாய்த்தூள் - 4 டேபிள் ஸ்பூன்
- மல்லித்தூள் - 2 டேபிள் ஸ்பூன்
- புளி - 3 எலுமிச்சைபழத்தின் அளவு
- கடுகு - 1டீஸ் ஸ்பூன்
- வெந்தயம் - 1டீஸ் ஸ்பூன்
- சீரகம் - 1 டீஸ் ஸ்பூன்
- நல்லமிளகு - 1 டீஸ் ஸ்பூன் (முழு மிளகு)
- பெருங்காய்த்தூள் - 1/2 டீஸ் ஸ்பூன்
- கறிவேப்பிலை - 3 கீற்று
- நல்லெண்ணெய் - 3/4 கப்
- உப்பு - தேவையான அளவு
ஒரு வெறும் வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கி அதில் எள், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு இவற்றை தனித்தனியாக வறுத்து பொடிசெய்து வைக்கவும். வேர்கடலையையும் லேசாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.புளியை ஒரு பாத்திரத்தில் இட்டு அதில் 1 கப் சுடுநீர் ஊற்றி ஊற வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் விட்டு அது காய்ந்ததும் கறிவேப்பிலை, கடுகு, வெந்தயம், சீரகம், நல்லமிளகு, இவற்றை போட்டு தாளிக்கவும்,பிறகு மிளகாய்த்தூள், மல்லித்தூள் போட்டு கிண்டி, எள், உ.பருப்பு, க.பருப்பு பொடியினை போட்டு கிண்டி விடவும்.
அடுத்து வேர்கடலை, பெருங்காய்த்தூள் மற்றும் புளித்தண்ணீர் தேவையான அளவு உப்பு இட்டு, 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும், பச்சை வாசம் போய் கலவை கெட்டியாக வரும் போது இறக்கி விடவும். கலவை ஆறிய பின் ஒரு பாட்டிலில் எடுத்து ஃபிரிஜ்ஜில் வைத்துக்கொள்ளவும் , தேவையான நேரம் சூடான சோற்றில் போட்டு கிளறி சாப்பிடவும்

No comments:
Post a Comment