காலிஃப்ளவர்-பட்டாணி குழம்பு - South Recipes
காலிஃப்ளவர்-பட்டாணி குழம்பு

காலிஃப்ளவர்-பட்டாணி குழம்பு

Share This
coli
தேவையானவை: 
  • காலிஃப்ளவர் (தனித்தனியாக உதிர்த்து வெந் நீரில் போட்டு எடுக்கவும்),
  • பச்சைப் பட்டாணி ஒரு கப்,
  • தக்காளி  1,
  • வெங்காயம்  1,
  • பச்சை மிளகாய்,
  • தேங்காய் துண்டுகள் தலா 2,
  • மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்,
  • தனியாத்தூள்,
  • இஞ்சி-பூண்டு விழுது தலா 2 டீஸ்பூன்,
  • பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்ந்தது ஒரு டீஸ்பூன்,
  • சீரகம் ஒரு டீஸ்பூன்,
  • மிளகாய்த்தூள்– தேவையான அளவு,
  • எண்ணெய்– தேவையான அளவு,
  • உப்பு – தேவையான அளவு.
செய்முறை: 

தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். தேங்காய், சீரகத்தை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு வதக்கிவெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். 

மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு, காலிஃப்ளவர், பச்சைப் பட்டாணி போட்டு, மிதமான தீயில் நன்றாக வதக்கவும். 

கடைசியில் தேங்காய் சீரக விழுதைச் சேர்த்துக் கிளறி, தேவையான அளவு தண்ணீர் விட்டு, கொதிக்க வைத்து காய்கறி நன்றாக வெந்ததும் இறக்கவும்.

No comments:

Post a Comment

Pages