தலைக்கறி கிரேவி - South Recipes
தலைக்கறி கிரேவி

தலைக்கறி கிரேவி

Share This

தேவையான பொருட்கள்:
  • ஆட்டு தலை- 1
  • வெங்காயம்-2
  • தக்காளி-2
  • கறிவேப்பிலை-சிறிது
  • பச்சை மிளகாய்-2
  • இஞ்சிபூண்டு பேஸ்ட்-3 ஸ்பூன்
  • சீரகத்தூள்-1/2 ஸ்பூன்
  • மிளகாய் தூள்-1 ஸ்பூன்
  • தனியா தூள்-1/2 ஸ்பூன்
  • மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
  • எண்ணெய்-4 ஸ்பூன்
  • பட்டை-1
  • ஏலக்காய்-2
  • கிராம்பு-2
  • உப்பு-1 ஸ்பூன்
  • கொத்தமல்லி-சிறிது
  • தேங்காய் துருவல்- 1 கப்
செய்முறை:
 
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, கறிவேப்பிலை,பச்சை மிளகாய் சேர்க்கவும்.

பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்,நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்

தக்காளியை சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.

நன்கு வதங்கியதும் சீரகத்தூள்,மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள், தனியா தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

2 நிமிடம் வதக்கி,அதனுடன் தலைகறியை சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் 5 விசில் விடவும்.

பின் குக்கரை திறந்து அரைத்து வைத்துள்ள தேங்காய் சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவும்.

தலைக்கறி கிரேவி தயார் கொத்தமல்லி இலை தூவி இட்லி,தோசை, சாதத்துடன் பரிமாறவும்.

No comments:

Post a Comment

Pages