தேவையான பொருட்கள் :
மிளகாய் பொடி - 2 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
- மல்லி பொடி - 1 டேபிள் ஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
- கருவேப்பிலை - சிறிது
- கொத்தமல்லி தழை - சிறிது
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
- பட்டை, கிராம்பு, மிளகு - சிறிதளவு
- சோம்பு - 1டீஸ்பூன்
- இஞ்சி , பூண்டு - நறுக்கியது சிறிது
- கலர் பொடி - சிறிது
செய்முறை:
முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கழுவி எடுத்து வைக்கவும். வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை நடிவில் வகுந்து வைக்கவும்.
பின்னர் குக்கரில் சுத்தம் செய்த சிக்கன் , வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், மிளகாய் பொடி, மல்லி பொடி, மஞ்சள் பொடி, இஞ்சிபூண்டு விழுது, சிறிது கருவேப்பிலை, உப்பு , 1 ஸ்பூன் எண்ணெய், மிளகு 10, (பட்டை, கிராம்பு அரைத்து பொடியாகவும் சேர்க்கலாம்) பட்டை, கிராம்புசிறிது அனைத்தையும் ஒன்றாக சேர்த்து சிக்கனுடன் பிரட்டி 5 நிமிடம் ஊறவைக்கவும் .
அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து பிரட்டி விட்டு பின்னர் குக்கரை நன்றாக மூடி வைக்கவும். குக்கரில் ஆவி வந்தவுடன் வெயிட்டை போடவும். பின்னர் மூன்று விசில் வந்தவுடன் இறக்கிவிடலாம். இப்பொழுது கறியுடன் மசாலாக்கள் எல்லாம் சேர்ந்து நன்றாக வெந்து இருக்கும் .
பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பிறகு சோம்பு, சிறிது மசாலா பொடி (பட்டை, கிராம்பு) , நறுக்கிய இஞ்சி பூண்டு ஆகியவைகளை சேர்த்து நன்றாக வதக்கவும்.
வதங்கிய பின் குக்கரில் இருக்கும் சிக்கனை அதில் சேர்க்கவும் , அதனுடன் சிறிது கலர் பொடியை சேர்த்து நன்றாக பிரட்டி விடவும். வெந்த சிக்கனிலும் தண்ணீர் இருக்கும் .( தண்ணீர் நமக்கு தேவைபட்டால் சேர்த்துகொள்ளலாம் .) சிறிது நேரம் மூடி வைக்கவும். பிறகு அதனுடன் பொட்டுக்கடலை மாவை சேர்த்து பிரட்டிவிடவும் . பின்னர் தண்ணீர் சுண்டியவுடன் மல்லிதழையை தூவி அடுப்பை அணைக்கவும்...

இப்பொழுது குக்கர் சிக்கன் கிரேவி ரெடி. இதனை சாதம், சப்பாத்தி, தோசை ஆகியவைகளுடன் சேர்த்து சாப்பிடலாம்... மிகவும் அருமையான சுவைமிகுந்த சிக்கன் கிரேவி ரெடி.
குறிப்பு:
கிரேவியாக வேடுமென்றால் இப்படி தண்ணீர் சேர்த்து செய்து கொள்ளலாம் . வறுவலாக வேண்டும் என்றால் தண்ணீர் சேர்க்காமல் வறுத்து கொள்ளலாம்.சுவையான குக்கர் சிக்கன் வறுவல் கிடைக்கும்.
கிரேவியாக வேடுமென்றால் இப்படி தண்ணீர் சேர்த்து செய்து கொள்ளலாம் . வறுவலாக வேண்டும் என்றால் தண்ணீர் சேர்க்காமல் வறுத்து கொள்ளலாம்.சுவையான குக்கர் சிக்கன் வறுவல் கிடைக்கும்.
No comments:
Post a Comment