ராஜ்மா அடை - South Recipes
ராஜ்மா அடை

ராஜ்மா அடை

Share This
054
தேவையானவை:
  • புழுங்கல் அரிசி - ஒரு கப்,
  • ராஜ்மா - அரை கப்,
  • இஞ்சி - சிறு துண்டு,
  • பாசிப்பருப்பு - ஒரு கப்,
  • உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்,
  • பச்சை வேர்க்கடலை - ஒரு கப்,
  • மிளகு - 2 டேபிஸ்பூன்,
  • நறுக்கிய வெங்காயம் - ஒரு கிண்ணம்,
  • எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:

அரிசியுடன் ராஜ்மா சேர்த்து ஊற வைக்கவும். ஊறியதும், தண்ணீர் வடித்து இஞ்சி, மிளகு சேர்த்து அரைக்கவும். பாசிப்பருப்பு, வேர்க்கடலை, உளுத்தம்பருப்பையும் ஊறவைத்து தனியாக அரைத்து எல்லா மாவையும் சேர்த்துக் கலக்கவும்.

உப்பு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து கலந்து கல் காய்ந்ததும், மிதமான தீயில் அடை தட்டி, வெந்ததும் எடுக்கவும். மிகவும் சத்து நிறைந்தது இந்த ராஜ்மா அடை.

No comments:

Post a Comment

Pages