தேவையானவை:
- கேழ்வரகு, புழுங்கல் அரிசி - தலா ஒரு கப்,
- பொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிதளவு,
- மிளகு - 2 டேபிள்ஸ்பூன் (ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும்),
- தேங்காய் - 2 துண்டுகள் (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்),
- காய்ந்த மிளகாய் - 4,
- புதினா - ஒரு கைப்பிடி,
- எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
கேழ்வரகை கல் நீக்கி அரிசியுடன் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். பிறகு களைந்து காய்ந்த மிளகாய் சேர்த்து அடைமாவு பதத்தில் அரைக்கவும்.
இதில் தேங்காய் துண்டுகள், இஞ்சி, மிளகு சேர்க்கவும். புதினாவை பொடியாக நறுக்கி எண்ணெயில் வதக்கிப் போடவும்.
தேவையான உப்பு சேர்த்து கலந்து அடை தட்டி, இருபுறமும் எண்ணெய் விட்டு வெந்ததும் எடுக்கவும். உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்ற அடை.
No comments:
Post a Comment